Sunday, November 7, 2010

கேரளாஅடுக்கு பிரியாணி

கேரளாஅடுக்கு பிரியாணி

1 பாஸ்மதி அரிசி (ஒரு கிலோ )
2 .கோழி அல்லது ஆட்டுக்கறி (ஒரு கிலோ )
3 .டால்டா (250 கிராம் )
4 .முந்திரி .அன்டிப்பருப்பு (இரண்டும் சேர்த்து 100 கிராம் )
5 மல்லி மற்றும் புதினா இல்லை (தேவையான அளவு )
6 .பெரிய வெங்காயம் (ஒரு கிலோ )
7 .தக்காளி (அரைக்கிலோ )
8 .பச்சமிளகா (10 எண்ணம் )
9 இஞ்சி மற்றும் பூண்டு (100 கிராம் )
10 .சமையல் ஆயில் (100 கிராம்)
11 தயிர் (100 கிராம்)
12 பிரியாணி மசாலா (50 கிராம் )
13 .அண்ணாச்சி பழம் (250 கிராம்)
14 .மஞ்சள் தூள் (ஒரு சிறு அளவு )
15 .உப்பு
16 .கொஞ்சம் பட்டை ,கிராம்பு ,ஏலக்கா
17 .பிரியாணி (வாசனைத் திரவியம் )
18 .பிரியாணி ( கலர் போடி )

பிரியாணி செய்யும் முன் சில தயார் செய்யவேண்டியவை
பாஸ்மதி அரிசியுடன் பட்டை, ஏலக்கா மற்றும் கிராம்பு இட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் அரை வேக்காட்டில் வடித்து வைக்கவும்
முந்திரி ,அன்டிப்பருப்பு ,மற்றும் சிறிது நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் எண்ணையில் முறுவலாக வதக்கி தனியாக வைக்கவும்
மல்லி மற்றும் புதினாவை சிறிதாக நறுக்கி வைக்கவும்
இஞ்சி .மற்றும் பூண்டை நன்றாக அரைத்து தனியாக வைக்கவும்
அண்ணாச்சி பழத்தையும் சிறிதாத நறுக்கி வைக்கவும்
டால்டாவை சூடில் இளகியபடி வைக்கவும்

இப்போது பிரியாணி செய்யலாம் வாங்க .....
அடுப்பை பத்தவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும் அதில் சமையல் எண்ணையை ஊற்றவும் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போடவும் வெங்காயம் நாற்றாக வதங்கிய உடன் பச்ச மிளகாவை போடவும் மீண்டும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் பொடியை போடவும் பிறகு நறுக்கி கழுவி வைத்த இறைச்சியை பொட்டு நன்றாக இளக்கவும்
இறைச்சி வெங்காயத்துடன் வதங்கி வரும் தருவாயில் நறுக்கிய தக்காளியை போடவும் பிறகு
அரைத்த இஞ்சி ,பூண்டை போடவும் பிறகுசிறிது உப்பிட்டு நன்றாக இளக்கவும் பிறகு பிரியாணி மசாலாவை பொட்டு மீண்டும் நன்றாக இளக்கவும்பிறகு சிறிதுதயிரை ஊற்றவும் ,பிறகு மசாலாவும் இறைச்சியும் ஒன்று சேர்ந்து வெந்தவுடன் அதை இறக்கி வைக்கவும் (பிரியாணி மசாலா ரெடி )

ஒரு காலியான பெரிய பாத்திரத்தை எடுக்கவும் அதில் முதலில் இறைச்சி மசாலாவின் கொஞ்சப் பகுதியை போடவும் பிறகு வடித்த பாஸ்மதி சோற்றின் அரைப்பங்கை போடவும் அதை மேலோட்டமாக சமப்படுத்தவும் பிறகு பிரியாணி கலர் பொடியை சிறுது தண்ணீரில் கலக்கி அதன் மேல் சிறிதாய் தொளிக்கவும் பிறகு மல்லி ,புதினா ,மற்றும் முந்திரி ,அன்டிப்பருப்பு .வாக்கிய வெங்காயம் .மற்றும் அண்ணாச்சி பழத்தையும் பொட்டு பிறகு இளகிய அரை டால்டாவை சுற்றி ஊற்றவும் பிறகு இரண்டாம் நிலைக்கு வந்து மீதியுள்ள மசாலா சோர் மற்றும் எல்லாப்பொருட்களையும் முதலில் செய்த போல் மறுபடியும் செய்யவும்
இறுதியாக பிரியாணி வாசனை திரவியத்தை எல்லா பக்கமும் தொளிக்கவும் பிறகு
ஒரு நல்ல மூடியிட்டு மூடி அவ்பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சிறிய அளவு தீ இடவும்
5 நிமிடத்திற்கு பிறகு வாசனைத்திரவியம் சூடாக்கி வாசம் வந்தவுடன் தீயை அணைக்கவும்
அரை மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து ஒரு பாகமாக கரண்டியால் பிரியாணியை எடுத்து
சாப்பிடும் பாத்திரத்தில் பரிமாறவும்
மிளகாவின் காரமும் ,தயிரின் புளியும் ,அண்ணாச்சி பழத்தின் இனிப்பும் கலந்த
சுவையான அடுக்கு கேரளா பிரியாணி ரெடி .....
செய்து, உண்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்

அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி


http://tamil2friends.com/node/27744

Tuesday, November 2, 2010

யுகாதிப் பச்சடி

சித்திரை மாசம் தமிழ் வருஷப் பிறப்பு அன்று செய்வது.

மாங்காய்ப் பச்சடி - வேப்பம்பூப் பச்சடி என்றும் சொல்லலாம்.
பச்சை மாங்காய் – 1 நல்ல நெத்து மாங்காயாக பார்த்து வாங்க வேண்டும்.
தேங்காய் – கால் மூடி அளவுக்கு
பாகு வெல்லம் – அரை உருண்டை அளவுக்கு உடைத்துக் கொள்ளவும்
புளி – ஆள் காட்டி விரல் நீளம் உள்ள அளவுக்கு - ஊற வைத்துக் கொள்ளவும்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் - ஒரு மணிநேரம் ஊறியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய் பொடி – 1 சிட்டிகை
வேப்பம்பூ - இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு

* தேங்காயை சின்னச் சின்னதாக (பேல்பூரி சாட் அல்லது சுண்டலுக்கு போடுவது போல நறுக்கிக் கொள்ளவும்.
* மாங்காயை தோல் சீவி விட்டு தொக்குக்கு (ஊறுகாய்) துருவுவது போல துருவியோ / மிக்சியில் ஒரு சுற்று அரைத்து தூளாக்கியது போலவோ செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பாகு வெல்லத்தை சீவிக் கொண்டு, ஏலம் சேர்த்து, ஒரு பால் கரண்டி அளவு தண்ணீரில் கரைத்து அடி கனமான வாணலியில் அரைப் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வரவேண்டும். வாணலி சூட்டிலேயே இன்னும் கொஞ்சம் கெட்டியாகி விடும் என்பதால் இந்தப் பதத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
* வேறு வாணலியில் (இன்டாலியம் அல்லது இரும்பு) சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுங்கள். வேப்பம் பூ நன்றாக வறுபடும் போது நமக்கு தொண்டையில் ஒரு கசப்பு ஏற்படும். இதை அப்படியே வெல்லத்தில் போடுங்கள்.
* இந்த வாணலியிலேயே, ஒரு முறை அலம்பி விட்டு, இரண்டு பால் கரண்டி தண்ணீர் விட்டு கடலை பருப்பை வேக விட்டுக் கொள்ளவும். கடலைப் பருப்பு முக்கால்வாசி வெந்ததும் மாங்காய் தேங்காயை போட்டு நீர் வற்றும் வரை, கருகாமல் பார்த்து வதக்கவும்.
* தண்ணீர் சுண்டியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, உப்பு, மிளகாய்ப் பொடி, வேப்பம் பூ எல்லாவற்றையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கி விடவும்.
* வெல்லப் பாகை லேசாக சூடு பண்ணிக் கொண்டு, பாகில் மாங்காய் தேங்காய் வேப்பம்பூ கலவையை சேர்த்தும், இரண்டு நிமிடம் கொத்திக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். கனமான வாணலி என்பதால் பாத்திர சூட்டிலேயே இறுகிக் கொள்ளும். அதனால் வெகு நேரம் வெல்லத்தை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.
* கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.

அங்காயப் பொடி

ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது. தேவையான அளவு அரைத்து ஜிப் லாக்கில் போட்டு freeze செய்தால் கண்டிப்பாய் ஆறு மாதம் வரை வரும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போட்டு, நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றிக் கொண்டு, (விரலை சுட்டுக்கொள்ளாமல்) கலந்து சாப்பிட்டால், வயிற்றுக்கு நல்லது. ஜுரத்தால் அல்லது நீண்ட விமான/ரயில் பயணத்தால், வாயில் கசப்பான உணர்வு இருக்குமே, அப்போது சாப்பாடு எதுவும் வாய்க்கு ருசிக்காது. இந்த பொடிசாதம் அப்போது அருமையாக இருக்கும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சுட்ட அரிசி அப்பளம் அருமையாக இருக்கும்.

கீழே உள்ள அளவுக்கு ஒருவர் தினமும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு (சாத்தில் கலந்து) சாப்பிட்டால் பதினைந்து நாட்கள் வரை வரும்.

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
சுண்டைக்காய் - 100 கிராம்
வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு (உலர்ந்தது)
மணத்தக்காளி - 100 கிராம்
சுக்கு - சுண்டு விரல் நீளம் ஒரு துண்டு
அல்லது எவரெஸ்ட் பிராண்ட் சுக்கு பொடி - மூன்று டீஸ்பூன்
மிளகு - எண்ணிக்கையில் 21
ஜீரகம் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

அடிகனமான வாணலியை அடுப்பில் வைக்கும் முன், நல்லெண்ணெய் சிறிது விரலில் தொட்டுக் கொண்டு வாணலியில் தடவி விட்டு, சூடான பின் சுண்டைக்காயை போட்டு நன்றாக கலகலவென்று (அப்டியே சப்தம் கேட்கும்) வறுத்துக் கொள்ளுங்கள். தட்டில் போட்டு ஆற விடுங்கள்.

கருவேப்பிலையை நன்றாக அலசிக் கொண்டு, துண்டில் போட்டு நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சுண்டைக்காய் மாதிரியே கல கலவென்று சத்தம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

வேப்பம் பூ, பின் மணத்தக்காளி, பின் மிளகு, அப்புறம் ஜீரகம் என்று தனித் தனியாக அதே வாணலியில் வறுத்து தனித் தனியாகவே ஆற விடுங்கள். கல் உப்பையும் அடுப்பை அணைத்த பிறகு வாணலியில் போட்டு வைத்தால் வாணலி சூட்டிலேயே காய்ந்து கொண்டு ஈரம் இல்லாமல் இருக்கும்.

கல் உப்பையும் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் தனித்தனியா மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக் கொண்டு கடைசியில் ஒன்றாகக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

நன்றி - வித்யாஸ் கிச்சன்