Tuesday, October 26, 2010

புதினா சாதம்


தேவையானவை

வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப


அரைக்க
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 2
இஞ்ஞி - 1 சின்ன துண்டு
லெமன் ஜூஸ் - ½ தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
மிளகாய் வற்றல் - 1
பெருங்காய தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து
நல்ல பச்சை வாசனை போக வதக்கவும்.
வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும்.
லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து
கிளறி விட்டு இறக்கவும்.
நல்ல சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
விரும்பினால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி
சேர்க்கலாம்.

Sunday, October 24, 2010

பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 100 கிராம்
பட்டாணிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 40
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறியது
கிராம்பு - 2
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 3
இஞ்சி - கொஞ்சம்
கசகசா - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. துவரம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
2. சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
4. தேங்காயில் பாதியை சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
5. மீதம் உள்ள தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
6. 2 பருப்பையும் அரைத்துக் கொள்ளவும்.
7. பட்டை, கிராம்பு, இஞ்சி, வர மிளகாய் அரைத்துப் பருப்புடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
8. பாதி வெங்காயம், கறிவேப்பிலை பாதி, உப்புச் சேர்த்து அத்துடன் பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
9. அடுப்பின் மீது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
10. மீதம் உள்ள வெங்காயம், பூண்டு போட்டுப் பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
11. உப்பு, புளி கரைத்த தண்ணீருடன் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த தேங்காய் விழுதை அதில் கரைக்கவும். அதில் மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
12. கொதிக்கும் போது வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டுக் கொஞ்சம் கெட்டியானதும் கொத்துமல்லித் தழை கொஞ்சம் போட்டு இறக்கவும்.

Friday, October 22, 2010




தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

Sunday, October 10, 2010

சுண்டைக்காய் வத்தக்குழம்பு


தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:

சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்