தேவையான பொருட்கள்:
* பச்சரிசி- 400 கிராம்.
* பால்- 2 லிட்டர்
* கற்கண்டு- 1 கிலோ (பொடி செய்து கொள்ளவும்)
* நெய்- 150 மில்லி கிராம்.
* முந்திரிப் பருப்பு- 20 எண்ணம்.
* கிஸ்மிஸ்பழம்- 20 எண்ணம்.
* ஏலக்காய்- 5 எண்ணம்.
* தேங்காய்- பாதியளவு.
செய்முறை:
1. பச்சரிசியை அதைப் போல் மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாகக் குழைய விடவும்.
2. அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும்.
3. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும்.
4. இந்த வதக்கல் அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
5. பொடி செய்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும்.
6. கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும்.
Friday, September 24, 2010
காஞ்சிபுரம் இட்லி
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை :
1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.
3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.
4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.
5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.
6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.
7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.
8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.
9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.
வெஜிடபிள் வடை
தேவையான பொருட்கள்:
* உளுந்தம் பருப்பு - 500 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (உரித்தது)
* மிளகாய் - 6 எண்ணம்
* காரட் - 50 கிராம் (துருவியது)
* கோஸ் - 50 கிராம் (துருவியது)
* பீட்ரூட் - 50 கிராம் (துருவியது)
* இஞ்சி - சிறிது
* கருவேப்பிலை - சிறிது
* மல்லித்தழை - சிறிது
* உப்பு - தேவையான அளவு
* ந.எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைத்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைக்கவும்.
2. இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
3. அரைத்த மாவுடன் துருவி வைத்த காரட், கோஸ், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் நறுக்கி வைத்த இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துப் பிசையவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
* உளுந்தம் பருப்பு - 500 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (உரித்தது)
* மிளகாய் - 6 எண்ணம்
* காரட் - 50 கிராம் (துருவியது)
* கோஸ் - 50 கிராம் (துருவியது)
* பீட்ரூட் - 50 கிராம் (துருவியது)
* இஞ்சி - சிறிது
* கருவேப்பிலை - சிறிது
* மல்லித்தழை - சிறிது
* உப்பு - தேவையான அளவு
* ந.எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைத்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைக்கவும்.
2. இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
3. அரைத்த மாவுடன் துருவி வைத்த காரட், கோஸ், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் நறுக்கி வைத்த இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துப் பிசையவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
Monday, September 6, 2010
சேமியா உப்புமா
தேவையானவை:
சேமியா உடைத்தது 2 கப்
வெங்காயம் 1
காரட் 2
குடமிளகாய் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் & உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,முந்திரிபருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.
அலங்கரிக்க:
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,தேங்காய் துருவல்.
செய்முறை:
வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உருக்கி உடைத்த சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வெங்காயம்,காரட்,குடமிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு 10 கப் தண்ணீருடன் சிறிது உப்பு,சிறிது எண்ணைய் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த சேமியாவைபோட்டு கிளற் வேண்டும்.சேமியா வெந்தவுடன் வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை விட்டு இரண்டு நிமிடம் கழித்து அதனையும் வடிகட்டவேண்டும்.(இப்படி செய்வதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்)
வாணலியில் எண்ணைய் விட்டு தளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி அதனுடன் பொடியாக நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவேண்டும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தக்காளியை போட்டு வதக்கவேண்டும்.பின்னர் வடிகட்டிய சேமியாவை சிறிது உப்பு,பெருங்காயத்தூள்சேர்த்து காய்கறிக்கலவையில் கல்ந்து கிளற வேண்டும்.இறக்கிய பின் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையையும்,தேங்காய் துருவலையும் தூவி அலங்கரிக்கவேண்டும்.
சேமியா பாயசம்
சேமியா பாயசம்

தேவையானவை:
சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும். அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
------
இப்பொழுது கடைகளில் roasted சேமியா கிடைக்கிறது.அதை வறுக்கவேண்டாம்

தேவையானவை:
சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும். அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
------
இப்பொழுது கடைகளில் roasted சேமியா கிடைக்கிறது.அதை வறுக்கவேண்டாம்
Friday, September 3, 2010
குலாப் ஜாமுன் - gulab jamun

தேவையானவை:
கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்
செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில் மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து பாகை வடிகட்டவும். வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால் ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும். brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம். (நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல் இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)
Subscribe to:
Comments (Atom)